மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்...சதுரகிரியில் பக்கதர்களுக்கு கட்டுப்பாடு விதித்த வனத்துறை! - Seithipunal
Seithipunal


சதுரகிரியில் மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மகா சிவராத்திரி நாளை தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.இதையொட்டி சிவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது . இந்த கோவிலில் நாளை புதன்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.மேலும்  இந்த பூஜையில் இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.மேலும் பக்கதர்களின் வசதிக்காக  மதுரை, தேனி, ராஜபாளையம், நெல்லை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படுகிறது.

மேலும் தாணிப்பாறை அடிவாரப்பகுதி மற்றும் கோவில் வளாகப்பகுதிகளில் மருத்துவ வசதி செய்யப்பட்டு வருகிறது. இதேபோல நீரோடை பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் தீயணைத்துறையினரும், தாணிப்பாறை அடிவாரப்பகுதி மற்றும் கோவில் வளாக பகுதிகளில் வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  மகா சிவராத்திரியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Preparations for Maha Shivratri in full swing Forest department imposes restrictions on devotees in Sathuragiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->