தனியார் கல்லூரி விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா! அச்சத்தில் மாணவிகள்!
private college hostel bathroom secret camera students fear
விருதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் ஓமியோபதி கல்லூரியில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாகவும், அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
அவர்களின் அந்த புகார் மனுவில், "விருதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் ஓமியோபதி கல்லூரி மத்திய அரசின் அங்கீகாரத்துடன் செயல்படுவதாக வந்த விளம்பரங்களால் எங்களது பிள்ளைகளை அந்த கல்லூரியில் சேர்த்தோம்.
ஆனால் தற்போது, அந்த கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தகுதி இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதாக எங்களது பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.
கல்லூரி சேர்க்கையின்போது தாங்கும் விடுதிகளில் மாணவிகளுக்கு ஒரு அறையில் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்து, 10-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே அறையில் தங்க வைத்துள்ளனர்.
அதே போல் கல்லூரியில் மொத்தமாக 5 கழிப்பறைகள் மட்டுமே உள்ளதால் மாணவிகள் பெறும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தாங்கும் விடுதிகளின் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் என மாணவிகள் அச்சப்படுகின்றனர்.
மேலும், விடுதியில் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை எனவும், சுற்று சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதால் பயத்துடனேயே இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகளின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவிகளின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எந்த மனுவில் மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இது புகார் மனு தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
private college hostel bathroom secret camera students fear