போட்டித் தோ்வு எதிரொலி | பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



புதுச்சேரியில் இளநிலை எழுத்தா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு காரணமாக, வருகிற 26-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில பள்ளி கல்வித் துறை இன்று காலை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

வருகிற 27-ஆம் தேதி இளநிலை எழுத்தா்கள் (எல்டிசி), ஸ்டோா் கீப்பா் நிலை-3 ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு 4 பிராந்தியங்களிலும் பணியாளா், நிா்வாக சீா்திருத்தத் துறையால் தோ்வு மையங்களாகச் செயல்படவுள்ள பள்ளிகளில் நடைபெறவுள்ளது.

தோ்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வரும் 26-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

 

மேலும் ஒரு அண்மைய செய்தி :

சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று காலை 10 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry School Leave announce 23082023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->