'குடும்பமே ரெண்டா போச்சி'! - 9 மாத கர்ப்பிணியை கரம் பிடித்த 7 ஆண்டு காதலன்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை, பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 21) இவர் சென்னையில் மொபைல் ஷோரூம் இல் பணியாற்றி வருகிறார். 

தஞ்சாவூர் பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 24) இவர் சேலத்தில் உள்ள தனியார் டவர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 

இந்நிலையில் சேலத்தில் இருந்து ஐயப்பன் அடிக்கடி சென்னை சென்று ஆஷாவை சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் ஆஷா கர்ப்பம் அடைந்தால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் கேட்டுள்ளார். 

ஐயப்பன் அவரது பெற்றோரிடம் ஆஷா என்ற பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் ஐயப்பனின் பெற்றோர் ஆஷா மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் என தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 

9 மாத கர்ப்பிணியான ஆஷா புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது ஆஷாவை ஐயப்பன் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் ஐயப்பனின் பெற்றோர் ஆஷாவை திருமணம் செய்து கொண்டால் வீட்டிற்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து பெண் வீட்டார் தலைமையில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai 9 month pregnant woman married Boyfriend 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->