நிவர்., புரெவி., இந்த பெயர்களின் அர்த்தம் தெரியுமா? எந்த நாடு இந்த பெயர்களை வைத்தது தெரியுமா?! அடடே..!
puravi name definition
தமிழகத்தில் கடந்த நிவர் புயல் தாக்கி ஒரு வாரம் ஆகிய நிலையில் தற்போது இரண்டாவதாக ‘புரெவி’ நாளை மதியம் தமிழகத்தின் பாம்பன் - கன்னியாகுமரி அருகே கரையை கடக்க உள்ளது.
இந்த ‘புரெவி’ புயல் பெயரானது ஒரு தாவரத்தின் பெயர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு தாவரம் எப்படி புயலானது என்ற கதை பற்றி நான் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
புயல் உருவாகும் போது அதற்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். வங்க கடல், அரபி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் புயல்களுக்கு பெயர்களை குறிப்பிட்டு வழங்கி வருகின்றனர்.
வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 13 நாடுகள் தலா 13 பெயர்களை வழங்கி வருகின்றன.
கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு புயல் வங்க கடலில் உருவானது. அதற்கு ஈரான் நாடு வழங்கியிருந்த ‘நிவர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. ‘நிவர்’ என்பதற்கு வெளிச்சம் என்று பொருள் ஆகும்.
தற்போது உருவான புயலுக்கு மாலத்தீவு நாடு வழங்கிய ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘புரெவி’ என்பது ஒரு தாவரத்தின் பெயர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.