மணிக்கணக்கில் கவுண்டரில் நிற்க வேண்டாம்.! கியூஆர்கோடு, யு.பி.ஐ. மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி.! - Seithipunal
Seithipunal


முக்கிய ரெயில் நிலையங்களில் 'கியூஆர்கோடு' 'யு.பி.ஐ. செயலி' மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை மேம்படுத்தும் வகையில் யு.பி.ஐ. செயலி மூலம் டிக்கெட் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதற்கு பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் பயணிகளுக்கு யு.பி.ஐ. செயலி மூலம் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை தெற்கு ரெயில்வே 6 கோட்டங்களில் 254 தானியங்கி டிக்கெட் எந்திரங்களில் இந்த வசதியை மேம்படுத்துகிறது. இதில் 254 எந்திரங்களில் சென்னை டிவிசனில் மட்டும் 96 எந்திரங்கள், திருச்சியில் 12, மதுரை 46, சேலம் 12, திருவனந்தபுரம் 50, பாலக்கோடு டிவிசனில் 38 இயந்திரங்களில் இந்த வசதி மேம்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, தானியங்கி டிக்கெட் வாங்கும் எந்திரத்தில் உள்ள திரையில் எந்த இடத்திற்கு பயணி செல்ல வேண்டும் என தேர்வு செய்த பிறகு அதற்கான கட்டணத்தை யு.பி.ஐ. செயலி அல்லது கியூ.ஆர்.கோடு மூலம் எளிதாக செலுத்தலாம்.

மேலும் இந்த வசதியை புறநகர் மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய பயன்படுத்தலாம் என்றும், தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிக்கெட் பிரிண்ட் செய்யப்படுகிறது என்றும தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

QR Code UPI Facility of taking tickets without reservation at railway stations


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->