உஷார்!!! தமிழகத்தில் 'தக்காளி காய்ச்சல்' நோய் தொற்றாம்...!!! சுகாதாரத் துறை கூறுவது என்ன?
Tomato Fever spreading Tamil Nadu health department say
தமிழ் நாடு முழுவதும் 'தக்காளி காய்ச்சல்' தற்போது பரவி வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

குழந்தைசாமி:
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"தக்காளி காய்ச்சல், சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.
பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும், கை, கால், முகம் கழுவுவது அவசியம். தக்காளிக் காய்ச்சலை பொறுத்தவரையில் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும்.
அதே நேரம் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது அவசியம்.இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்து, உடல் சோர்வை உண்டாக்கும்.
எனவே அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.மக்களை அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
English Summary
Tomato Fever spreading Tamil Nadu health department say