தமிழகம்: பள்ளி மாணவிகளுக்கு தொல்லை புகார்! விசாரணையின் போதே தலைமையாசிரியர் தற்கொலை!
Ramanadhapuram School Head Master Harassment case
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியர் சேட் அயூப்கான் (வயது 56), பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து, விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
மாரியூரைச் சேர்ந்த அயூப்கான் மீது பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் அளித்ததையடுத்து, குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினர்.
மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோரிடம் நடந்த விசாரணையின் இரண்டாம் கட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில், தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை, அவரது மனைவி எழுப்பச் சென்றபோது, அவர் தூக்கிட்டு உயிரிழந்ததை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:
தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050
இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.
English Summary
Ramanadhapuram School Head Master Harassment case