தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலை அகற்றம் – உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது!
Removal of MGR statue in Thanjavur High Court dismisses petition
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்கிருஷ்ணன் தாக்கல் செய்த இந்த மனுவில், திருவாரூர் குடவாசல் சாலை அருகே நாச்சியார் கோவில் குளக்கரையில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை 35 ஆண்டுகளாக இருந்தாலும், அது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை எனக் கூறப்பட்டது.
ஆனால், கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலையை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியதற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் அதிமுக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி, "எந்த கட்சி தலைவரின் சிலையாக இருந்தாலும், அது பொது இடங்களில் இல்லாமல் கட்சி அலுவலகத்திலேயே இருக்க வேண்டும். பொதுவெளியில் சிலைகளை அனுமதிக்க முடியாது" என கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெறுவதாக அறிவித்ததால், நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
English Summary
Removal of MGR statue in Thanjavur High Court dismisses petition