நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் - அறிக்கை தாக்கல் எப்போது? - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். இதைத் தடுக்க வந்த மாணவனின் தங்கைக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மாநில அரசு தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

அதன் படி இந்த விசாரணை குழு சம்பவம் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து 950 பரிந்துரை கடிதங்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும், சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவரையும், கூர் நோக்கு இல்லத்தில் உள்ள தாக்குதல் நடத்திய மாணவர்களையும் நீதிபதி சந்துரு விரைவில் சந்திக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் நீதிபதி சந்துரு தனது விசாரணை அறிக்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

report filing of nanguneri school student attack issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->