தமிழகத்தில் 2 மாவட்டங்களில் திடீரென உயர்ந்த அரிசி விலை! இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் அரிசி விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் டெல்டா மாவட்டங்களில் நெல் வாங்கி செல்வதே விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரிசி நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று வருவதால், தூத்துக்குடியில் அரிசி விலை கிலோ ரூ. 10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. 

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் நெல் வரத்து குறைந்துள்ளதால் தூத்துக்குடியில் அரிசி விலை உயர்ந்துள்ளது 5 கிலோ 10 கிலோ அரிசி பைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பும் விலை உயர காரணம் என வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் செய்தமடைந்ததாலும் தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் அரிசி விலை உயர காரணமாக உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rice prices increased 2 districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->