கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி!ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 10,000 மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பொதுமக்கள் அடகு வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பெய்த கனமழையால் ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்து இருந்தது.

அந்த நேரத்தில் கொள்ளையர்கள் வங்கியின் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் மூலம் உடைத்து வங்கிகள் நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வங்கியில் உள்ள லாக்கரை உடைக்க முயற்சிக்கும் பொழுது வங்கியின் காவலாளி முத்துக்கண்ணு வந்துள்ளார். இதனைப் பார்த்துக் கொள்ளையர்கள் முத்துகண்ணுவை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இதன் காரணமாக வங்கியில் இருந்த சுமார் ரூ 7.3 கோடி மதிப்புள்ள நகைகளும் ரூ.14 லட்சம் ரொக்கமும் தப்பின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கியில் கொள்ளை போகவில்லை எனவும் நகைகள் பணமும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து வங்கியின் முன்பு குவிந்திருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாய்மேடு காவல் ஆய்வாளர் கன்னிகா சம்பவ இடத்திற்கு விரைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் கொள்ளையர்கள் உபயோகித்த காஸ் சிலிண்டரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்டிஸ்கை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robbery attempt at nagapattinam Cooperative Bank


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->