பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம் - காரணம் என்ன?
rope car service stop to two days in palani temple
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் மலைக் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதைத் தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் உள்ளிட்ட சேவைகள் பயன்பாட்டில் உள்ளது.
இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் காரணமாக பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.
அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. ஆகவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rope car service stop to two days in palani temple