அதிமுக நிர்வாகியிடம் இருந்து ரூ.33 லட்சம் பறிமுதல்.!!
Rs33 lakhs seized from aiadmk Admin
சென்னை வேளச்சேரி மெட்ரோ பிளம்பிங் ஸ்டேஷன் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி 4வது அவென்யூ சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காருக்கு ஒன்றை மறித்து சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் காரில் இருந்த 33 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயை தேர்தல் பறிக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தேர்தல் பழக்கம் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தென்சென்னை அதிமுக கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருக்கும் அடையாறு கோவிந்தராஜபுரம் 2வது தெருவை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நண்பர் ஒருவருடன் இணைந்து ஆதம்பாக்கத்தில் மதுபானம் கூடம் நடத்தி வருவதாகவும் அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இதுகுறித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரியிடமும் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை இடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Rs33 lakhs seized from aiadmk Admin