திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.46 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் சிக்கியது...!!
Rs46 lakh worth foreign currency caught at Trichy Airport
திருச்சி விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் பயணிகளை சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் 53,133 யூரோ மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து சதாம் உசேனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.46 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Rs46 lakh worth foreign currency caught at Trichy Airport