சு. வெங்கடேசனுக்கே அழைப்பு இல்லையா? தமிழக அரசுக்கு குவியும் கண்டனம்!
S. Venkatesan didn't call Tamil Nadu government condemnation
மதுரையில் ஜூலை 15-ல் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் எம்.பி., எம்.எல்.ஏ. பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் வருகின்றன:
மதுரையின் புதுநத்தம் சாலையில் அதிநவீன அம்சங்களுடன் மற்றொரு அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் தயாராகி வருகிறது. இது 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.215 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இது தென்மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
இந்த கலைஞர் நூலகம் கட்டுமானப்பணிகள் கடந்த 11.01.2022-ல் தொடங்கி கடந்த ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற ஜூலை 15-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னின்று திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக அழைப்பிதழ் தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்டதில் எழுத்தாளர், சாகித்ய அகாடமி விருதாளர், மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கட்சி) பெயர் அழைப்பிதழில் இல்லை.
அதேபோல் தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி ஆகியோர் பெயர் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளைத்தான் தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறது. ஆனால், அந்த அழைப்பிதழில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பெயரும் குறிப்பிடாதது ஏனோ? இது தான் 'திராவிட மாடல்' அரசு என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், எல்லாரும் சமம் என்பதே திராவிட மாடல் என முழங்கும் திமுக அரசு, நூலகம் திறப்பு விழா அழைப்பிதழில் எம்.பியின் பெயரையும், தொகுதி எம்.எல்.ஏவின் பெயரையும் குறிப்பிடாதது ஏன்?
மேலும், கல்வி வளர்ச்சி நாளன்று திறக்கப்படும் என குறிப்பிட்டவர்கள் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள் என குறிப்பிடாதது ஏன்? - என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுதான் 'திராவிட மாடலா' எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
S. Venkatesan didn't call Tamil Nadu government condemnation