3 பிள்ளைகளை அரிவாளால் வெட்டிய தந்தை! ஆத்தூரில் அதிர்ச்சி சம்பவம்!
salem child death
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்த கொடூர சம்பவத்தில், அசோக்குமார் என்பவர் தனது 13 வயது மகளையும், 5 வயது மகனையும், தனது மனைவி தவமணியையும், மூன்றாவது மகளையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது மனைவி தவமணி மற்றும் மூத்த மகள் அருள் குமாரி காயமடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்குப் பிறகு, அசோக்குமாரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.