தமிழகத்தையே பதறவைத்த விஜயா பானு! பறிமுதல் செய்யப்பட்ட ரூ.500 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி!
Salem Money Cheating Case
சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.10க்கு உணவு வழங்கிய ஒரு கும்பல், மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதும், “முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பு திரும்ப கிடைக்கும்” என விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த அறிவிப்பை நம்பி பலர் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தனர். தொடர்ந்து மறுநாள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ரூ.2 லட்சம் கிடைக்கும் என புதிய விளம்பரம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதி உள்ளது.
திடீர் மக்கள் கூட்டத்தால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணைக்கு வர, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த, எந்த ரசீதும் இல்லாமல் இக்கும்பல் ரூ.500 கோடி வரை வசூலித்தது தெரியவந்தது.
மேலும், அறக்கட்டளை நடத்தும் விஜயா பானு மீது பல மோசடி வழக்குகள் இருப்பது தெரிய வர, விஜயா பானு உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.500 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ரூ.500 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருட்களை, பாதுகாப்பு கருதி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து இன்று கோட்டை பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் லாக்கரில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Salem Money Cheating Case