ஷாக் நியூஸ்... சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் திடீர் ரத்து! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


செகந்திராபாத் ஆசிபாபாத் சாலை - ரெச்னி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது ரயில் பாதையை இயக்குவதற்கான பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதனால் 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 21, 28 மற்றும் ஜூலை 5ஆம் தேதி கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. 

வருகின்ற 24, ஜூலை 1, 8 ஆம் தேதி ஹஸ்ரத் நிஜாமுதீன் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 22 , 29 ஆகிய தேதிகளில் கொச்சுவேலி - இந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் வருகின்ற 24 ஜூலை 1ஆம் தேதி இந்தூர் - கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. 

25, 2 ஆம் தேதி பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது. வருகிற 24, 1-ந் தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட உள்ளது. 

வருகிற 26, 3-ந் தேதி எர்ணாகுளம்- பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், வருகிற 26, 29, 3, 6 ஆகிய தேதிகளில் கோர்பா - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem through passing 10 trains cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->