தமிழகத்தின் ஆற்று மணலை பாதுகாக்க மத்திய அரசு? உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு!
sand quarry issue chennai hc division order
தாது மணல் வளத்தை மத்திய அரசு பாதுகாத்து, கண்காணிப்பது போல, ஆற்று மணலை ஏன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்று, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் மணல் குவாரிகளுக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகளில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி அவர்கள், தாது மணலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது போல, ஆற்று மணலையும் பாதுகாக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மணல் குவாரி தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஆற்று மணலை பாதுகாப்பது மத்திய அரசின் கையில் போனால், கடுமையான நடவடிக்கைகள் பாயும். இதன் காரணமாகவே நீதிபதி இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளதாகவும். இது வரவேற்க கூடிய விவகாரம் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
sand quarry issue chennai hc division order