#Breaking: கானா புள்ளிங்கோ மீது பாய்ந்த போக்ஸோ.! சிறுமியை கர்ப்பமாக்குவதாக பாடி சிக்கிய சரவெடி சரண்.! - Seithipunal
Seithipunal


பேஸ்புக், யூட்யூப் போன்ற செயலிகளில் நடிப்பவர்களுக்கு சீரியல், வெள்ளித்திரை என்று நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. பலருக்கு வாழ்க்கை தரும் விஷயமாக பேஸ்புக் போன்ற சோசியல் மீடியா இருந்தாலும், எதையாவது கருத்து என்ற பெயரில் பேசி நெட்டிசன்களிடம் அடிவாங்குவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

அந்தவகையில் சரவெடி சரண் என்ற 26 வயது கானாபாடகர் ஒருவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார். அந்த வீடியோவில் அவர், " பால்வாடி படிக்கும் போதே குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்து.. எட்டாவது படிக்கும்போதே பெண்ணை கர்ப்பமாக்கி வாந்தி எடுக்க வைத்து விடுவேன். அப்போது தான் என்ன விட்டு போகாது." என்று பெண்கள் குறித்து இழிவாக பாடி இருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. அத்துடன் இது குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகவும் பார்க்கப்படுகிறது. மிகவும் வக்கிரமான மனநிலையில் பாடப்பட்ட இந்தப்பாடல் தற்போதைய நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை பெற்று இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தது. 

இந்த நிலையில் தற்போது இந்த விஷயம் திருவள்ளூர் எஸ்பி அருண்குமாரின் கவனத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து, சரவெடி சரண் என்ற 26 வயது கானா பாடகரான அவர் மீது போஸ்கோ சட்டத்தின் 16 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீஸ் தேடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saravedi saran may arrest by Pocso


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->