பேனா பிடிக்கும் கையில் துடைப்பத்துடன்.. பள்ளி சிறுவர்களே தூய்மை பணியில் ஈடுபட்ட அவலம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பங்குளம் ஊராட்சியில் மேம்பாட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளை தூய்மை பணியில் ஈடுபடுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த துவக்க பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இந்த துவக்க பள்ளியில் தூய்மை பணியாளர் இல்லாததால் மாணவர்களிடம் துடைப்பம் கொடுத்து தூய்மை பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு சென்ற மாணவர்கள் தூய்மை பணியை நிறுத்தியதோடு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு ஏற்கனவே பள்ளி மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School students engaged in cleanliness work in viruthunagar govt school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->