ஜெயங்கொண்டம் : பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது.!
school teacher arrested for sexuall harassment case in jayankondam
ஜெயங்கொண்டம் : பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
![](https://img.seithipunal.com/media/crime kjsd-zy8zv.png)
இந்த நிலையில், வில்வேந்திரன் அதே கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதனால், அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் சிறுமி வில்வேந்திரனிடம் சென்று தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், வில்வேந்திரன் திருமணம் செய்துகொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/CRIME 004.jpg)
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுமி சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து வில்வேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school teacher arrested for sexuall harassment case in jayankondam