நடிகர் விஜய்யின் 'தி கோட்'படம் வெற்றி பெற சீமான் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் படம் வெற்றி பெறவும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக அமையவும் வாழ்த்து தெரிவிப்பதாக சீமான் கூறியுள்ளார்.

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் கட்சி மாநாட்டுக்கு வேண்டும் என்றே அனுமதி தராமல்  காலதாமதம் செய்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு அனுமதி வழங்காமல் பெண்கள், குழந்தைகள் என உள்பட எல்லோருக்கும் பாதுகாப்பு குறித்து  21 கேள்விகளை கேட்டு வேண்டும் என்றே காலதாமதம் செய்கிறார்கள்.

இதுவரை நடந்த, நடத்தப்பட்ட மாநாடுகளில் இந்த மாரி கேள்விகளுக்கு  பதில் அளித்துவிட்டுதான் நடத்தினார்களா?

கட்சிக்கான மாநாட்டை ஏற்பாடு செய்பவர்கள் அனைத்தையும் நன்றாக செய்வார்கள். அண்ணன்-தம்பி என்ற அன்பில் விஜய்யின் மாநாடு சிறப்பாக அமைய வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.

இதனை தொடர்ந்து தம்பி விஜய்யின் புதிய படம் வெளியாகிறது. படத்தை இயக்கியவரும், நடித்திருப்பவரும் எனது தம்பிகள் தான். இந்த படமும் வெற்றி பெற நாம் வாழ்த்துகிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman wishes actor Vijay's film The Goat a success


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->