நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும் அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் - சீமான்.!
seeman wishes to tvk leader vijay
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைப்பதோடு, கொடி பாடலையும் வெளியிடுகிறார்.
இதற்கிடையே, கொடியை அறிமுகம் செய்யும் நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
"தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த் தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் அவர்கள் இலட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
seeman wishes to tvk leader vijay