''என்னுயிர் அன்புதம்பி ''... - தவெக தலைவர் விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து.!
Seeman wishes TVK leader Vijay birthday
நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறையினர் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில்,
தமிழ் திரையுலகில் தன் திறமை மிக்க நடன உரையாடல் உச்சரிப்பு உடல் மொழி சண்டை காட்சிகள் என அனைத்திலும் ஆற்றலை பெருக்கி ஆக்கச் சிறந்த நடிப்பு திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்து தரப்பு மக்களின் மனங்களையும் வென்று தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு அனைவரது நேசத்தையும் பெற்று உச்சம் தொட்டு உயர்ந்து நிற்கும் அன்பு தம்பி.
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வியல் சரித்திர மாற்றத்தை கொண்டு வருவதற்காக அரசியலில் அடி எடுத்து வைத்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கொள்ள முனைந்துள்ள எனது அன்பு தளபதி தமிழக வெற்றி கழக தலைவர் என் உயிர் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seeman wishes TVK leader Vijay birthday