அதிர்ச்சி தீர்ப்பு! சற்றுமுன் உச்சநீதிமன்றம் ஓடிய செந்தில்பாலாஜி!
Senthilbalaji Appeal to SC for ED Case
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரின் மனைவி மேகலா தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், அந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரிகளுக்கான அதிகாரம் இல்லை. ஆனால், கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்ற கூறவில்லை.
செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அமலாக்கத்துறை அவரை கைது செய்ததும், அமர்வு நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைத்ததும் சட்டப்பூர்வமானது தான்.
கைதுக்கான காரணத்தை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு சொல்வதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.
செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஆட்கொணர்வு மனு ஏற்புடையல்ல என்று நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் இரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Senthilbalaji Appeal to SC for ED Case