ஜாமீன் கோரும் செந்தில்பாலாஜி! மொத்தமா முடிச்சு விட தயாராகும் அமலாக்கத்துறை!
Senthilbalaji ED Case Bail And Case closed Call
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, கடந்த ஐந்து தினங்களாக காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த ஏழாம் தேதி முதல் செந்தில் பாலாஜி இடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மாலைடன் செந்தில் பாலாஜி இடம் நடந்த விசாரணை நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து, சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் 16ஆம் தேதி செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளது.
செங்கல்பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றபத்திரிக்கை நகலை, செந்தில் பாலாஜிக்கு இடம் ஒப்படைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக சாட்சிகளிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பண பரிமாற்ற மொத்தமாக முடிவுக்கு கொண்டு வரும் முனைப்பில் அமலாக்கத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
English Summary
Senthilbalaji ED Case Bail And Case closed Call