செந்தில் பாலாஜிக்கு போலியான அறுவை சிகிச்சையா? அமலாக்கத்துறை கேட்ட அவகாசம்! வழக்கை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!
Senthilbalaji wife case chennai hc june 27
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வைத்த வாதம் பின்வருமாறு, "செந்தில்பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை காவலில் வைத்திருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான்.
செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கைது குறித்த தகவல், கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது சட்டப்பிரிவு 15ஏ படி அடிப்படை உரிமை. நீதிமன்ற காவல் சட்டவிரோதமாக இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான்" என்று வாதம் செய்தார்.
அப்போது நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, அமலாக்கப் பிரிவு உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளது என்று, செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வேண்டுமானால் இக்காரணத்தை குறிப்பிடலாம். ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் பதில் வாதம் வைக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலியான அறுவை சிகிச்சை என எப்படி அமலாக்கத்துறை கூற முடியும். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நான்கு அடைப்புகள் சரி செய்யப்பட்டது என்று செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் பதில் வாதம் வைக்க கால அவகாசம் கோரினார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை, வரும் ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English Summary
Senthilbalaji wife case chennai hc june 27