செந்தில்பாலாஜிக்கு ஒன்றும் இல்லை! அடித்துக்கூறும் அமலாக்கத்துறை! இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு!
Senthilbalaji wife case ED Some info
சென்னை உயர்நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நிறைவடைந்து இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரதசக்ரவத்தி அமர்வில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால், செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதமானது என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் வைத்தார்.
அப்போது, ஏற்கனவே செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்திருப்பதால், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என அமலாக்கத்துறை தரப்பு வாதம் வைத்தது.
மேலும், அவர் உடல்நிலை குறித்த தமிழக அரசு மருத்துவர்களின் அறிக்கையில் சந்தேகம் எழுப்பிய அமலாக்கத்துறை, எய்ம்ஸ் மருத்துவ குழுமூலம் செந்தில்பாலாஜியை பரிசோதனை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியது.
வழக்கு விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தரப்பு வழக்கறிஞர் சரவணன் "செந்தில் பாலாஜிக்கு மருத்துவ உதவி கிடைப்பதை அமலாக்கத்துறை தாமதப்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், "குடும்ப உறுப்பினர்களிடம் முறைப்படி தெரிவிக்காமல் கைது செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனை அறிக்கையை நம்ப அமலாக்கத்துறையினர் மறுக்கின்றனர்" என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Senthilbalaji wife case ED Some info