அரிசி ஆலையில் விபத்து.. அரிசி வெள்ளத்தில் மூச்சுத்திணறி.. அரங்கேறிய கொடூரம்.!
Sivagangai rice mill accident 2 peoples death
சிவகங்கை மாவட்டத்தில் தனியார் அரிசி ஆலையில், இயந்திர கூம்பு உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சாக்கோட்டை பகுதியில் சாக்கோட்டையில் இருந்து மணமேல்குடி செல்கின்ற சாலையில் தனியார் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் அரிசி பேக்கிங் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது, திடீரென்று இயந்திரத்தின் மேல் கூம்பானது உடைந்து போயுள்ளது. இதனால், அரசி மள மளவென சரிந்து விழுந்துள்ளது. அப்போது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன் குமார் மற்றும் சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் உள்ளிட்டோர் அரிசிக்குள் சிக்கி மூச்சுதிணறி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து இறந்த பணியாளர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Sivagangai rice mill accident 2 peoples death