சிமெண்ட் அளவு குறைத்த ஒப்பந்ததாரர்.. கையோடு வரும் செங்கல்..!! அரசு பணம் ₹1.95 கோடி ஏப்பம்..!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை பேருந்து நிலைய கட்டிடங்கள் அவசர கதியில் தரம் இல்லாமல் கட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பேருந்து நிலையத்துக்கான புதிய கட்டிடம் ₹ 1.95 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணியில் பில்லர்கள் எழுப்பப்பட்டு செங்கல் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தரமில்லாமல் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுமான பணியில் சிமெண்ட் கலவை தரமில்லாமலும், தொட்டாலே பெயர்ந்து விழும் நிலையில் செங்கல் கட்டுமானம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து நிலைய கட்டுமான பணியை மதுரை மண்டல அலுவலர் ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் கட்டிடம் கட்ட உத்தரவிட்டார். இந்த நிலையில் கிராவல் மண்ணை வைத்து மூடி மீண்டும் கட்டுமான பணி தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தை தரமில்லாமல் கட்டினால் பல உயிர்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai sus stand construction is going on in a substandard manner


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->