தொல்லியல் துறை இடத்தில் செம்மண் திருட்டு.!! அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து ஆட்டைய போட்ட சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து செம்மண் திருடப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. சுமார் 90% பணி தற்போது நிறைவு பெற்ற நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்காக அதன் அருகே தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருந்து அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சுமார் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் செம்மண் அள்ளபட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகார் குறித்து  சென்னை பெருநகர் வளர்ச்சி குழும செயலர் அன்சுல் மிஸ்ரா அளித்துள்ள விளக்கத்தில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து பேருந்து நிலைய பணிக்காக மண் அள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகாரின் அடிப்படையில் சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையிலான அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 12 அடி ஆழம் வரை தோண்டி செம்மண் திருடப்பட்டதை உறுதி செய்துள்ளனர். மேலும் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்திலிருந்து மண் அல்லாமல் தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுமான பணி துவங்கும் முன்பே தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட இடத்தில் எந்தவித கட்டுமான பணியும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த இடத்திலிருந்து செம்மண் திருடப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தொல்லியல் துறையின் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட இடத்தில் மண் அள்ளவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தொல்லியல் துறை செம்மண் அள்ளப்பட்டதை உறுதி செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொல்லியல் துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட இடத்தில் வேலி அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இரவு நேர காவலாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளை தொலைபேசி வாயிலாகவும், இணையதள வாயிலாகவும், எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soil has stolen from archeology site for kilampakkam bus stand construction


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->