தமிழ்நாடு சட்ட ஆணைய தலைவராக சொக்கலிங்கம் நாகப்பன் மீண்டும் நியமனம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் முதன் முதலாக, கடந்த 1994ம் ஆண்டு மாநில சட்ட ஆணையம் அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் செயல்பட்டது. அதன் தொடர்ச்சியாக சட்ட ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சென்னை மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார். கரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் பட்டப்படிப்பும், மதுரையில் சட்டப்படிப்பும் பயந்துள்ளார். முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரனிடம் ஜூனியராக பயிற்சி பெற்ற சொக்கலிங்கம் நாகப்பன் கடலூர், சேலம், கோவையில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி உள்ளார். 

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது வரை 3வது முறையாக தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sokkalingam Nagappan reappointed as TN law commission chairman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->