ரேஷன் கார்டில் பெயர் நீக்க, சேர்க்க சிறப்பு முகாம் - எங்கு? எப்போது?
special camp for name add and delete in ration card
சென்னையில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தலுக்காக வருகின்ற 25 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "ரேசன் கார்டுகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம் முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னையில் வருகிற 25-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் 12 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ள இந்த முகாம்களில் பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special camp for name add and delete in ration card