உதயநிதி திடீர் ஆய்வு! மும்முரமாக நடைபெறும் மெட்ரோ பணிகள்!
Sports Minister Udayanidhi inspects metro rail works in Royapettah
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் இராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நிலத்தடி மெட்ரோ இரயில் நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டம் பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோன்றும் எந்திரம் மூலம் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 48 ரயில் நிலையங்களுடன் அமைக்கப்பட்டு வரும் வழித்தடம் மூன்றில் ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது .
19 கிலோமீட்டர் உயர் மட்ட பாலமாகவும், 26.4 கிலோமீட்டர் நிலத்தடியிலும் அமைக்கப்பட்டு வருகிறது... அந்த வகையில், ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளின் 3வது வழித்தடத்தில் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
குறிப்பாக ராயப்பேட்டையில் இருந்து ஆர்.கே.சாலை வரை மொத்தம் 910 மீட்டர் தொலைவிற்கு பவானி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் இராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நிலத்தடி மெட்ரோ இரயில் நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வில் நடைபெற்று வரும் பணிகளில் எத்தனை சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்பது குறித்து உடன் இருந்த மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு அறிந்தார்.
English Summary
Sports Minister Udayanidhi inspects metro rail works in Royapettah