தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் - ஒரே நாளில் 28 ராமேஸ்வர மீனவர்கள் கைது.!
sri langan navy arrested twenty eight rameshwaram fishermans
தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் - ஒரே நாளில் 28 ராமேஸ்வர மீனவர்கள் கைது.!
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்களில், இரு படகுகளில் 16 மீனவர்கள் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துள்ளனர்.
அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து கடுமையாகத் தாக்கி, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளுடன் 16 மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் மேலும் மூன்று படகுகளை முற்றுகையிட்ட இலங்கை கடற்படையினர் அதிலிருந்து 12 மீனவர்களையும் தாக்கியதோடு சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
English Summary
sri langan navy arrested twenty eight rameshwaram fishermans