தமிழக மீனவர்களிடம் இனி இப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது.. இலங்கைக்கு இந்திய அரசு வலியுறுத்தல்.!
Sri Lankan Navy should not be harsh on Tamil Nadu fishermen
இந்திய கடலோர பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்வது நீண்ட ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐந்தாவது கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரத்தன்நாயக் மற்றும் இந்தியா சார்பில் மீன்வளத் துறை செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் தமிழக மீன்வளத்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன. அப்போது கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் இலங்கை கடற்படையினருடன் துணை ராணுவப் படையினரை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
English Summary
Sri Lankan Navy should not be harsh on Tamil Nadu fishermen