சிவகங்கையில் நடந்த அதிசியம்....! தடுப்பணை கட்டும் பணியின்போது வந்த சிலை! வியப்பில் ஆழ்ந்த பணியாளர்கள்!!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் ,திருபுவனம் வட்டம், திருப்பாச்சேத்தி ஊராட்சியில் உள்ள வைகை ஆற்றில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டமானது மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய தண்ணீரைச் சேமித்து விவசாயத்திற்கும் மற்றும் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் பயன்படுத்தும் முறையில் செயல்படுத்த உள்ளன.

தடுப்பணை திட்டம்:

மேலும் இந்தத் தடுப்பணை வைகை ஆற்றில் திருப்பாச்சேத்தி மற்றும் முத்தனேந்தல் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனக் கருதப்படுகிறது.
மேலும் இந்தப் பணியின் போது , கல் ஒன்று தட்டுப்பட்டதை அறிந்து அதனை எடுக்க முயன்றனர்.

கற்சிலை:

அதன் அளவு பெரியதாக இருந்ததால் சிலரைச் சேர்த்துக்கொண்டு கடும் சிரமத்தைத்தோடு எடுத்தனர். எடுக்க எடுக்க அதன் வடிவம் சிறிது மாறுபட்டிருந்ததால் அங்குள்ள நபர்கள் சிலையாக இருக்கலாம் என எண்ணினர். அதன் பிறகு முழுமையாக அதனைக் கழுவி பார்த்த பிறகு அச்சிலையானது கோவில் 'அம்மன் சிலை' போல் இருந்தது. இதனைக் கண்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.மேலும் இச்சிலையானது பழங்காலத்தில் பார்க்கப்படும் கற்சிலைப் போல இருந்தது. உடனே அங்கிருந்து மக்கள் இதனைப் போலீசாருக்கு தெரியப்படுத்தினர்.

ஆராய்ச்சி:

விரைந்து வந்த போலீசார்ச் சிலையை ஆராய்ச்சியாளர்களுக்குக் கொண்டு சென்றனர். ஆராய்ச்சியாளர்கள் அதனை ஆய்வு செய்த பின்னர் இச்சிலையானது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் எனத் தகவல் வெளியிட்டனர். மேலும் இச்சிலையானது ,எதனைக் குறித்து வடிவமைத்துள்ளது? அதன் பூர்வீகம் எது ?என ஆராய்ச்சி பல ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stone Discovery Employees Amazed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->