ப்ரீ பையர்  விளையாடியதை கண்டித்த தாய்.. மகன் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


ப்ரீ பையர்  விளையாடியதை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் தனது மகன் சுரேஷூடன் தனியே வசித்து வருகிறார். சுரேஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் ஆன்லைனில் ப்ரீபயர் கேம் விளையாடி வந்துள்ளார்.

படிக்காமல் ப்ரீபயர்கேம் மட்டுமே விளையாடி வந்த சுரேஷை கண்ட அவரது தாய் கண்டித்துள்ளார். அதனை கண்டுகொள்ளாமல் சிறுவன் தொடர்ந்து விளையாடி வரவே கோபமடைந்த அவர் கடந்த நான்கு நாட்களாக மகனிடம் பேசாமல் இருந்துள்ளார்.

பலமுறை அன்னையை கெஞ்சியும் அவர் பேசாததால் மனமுடைந்த அவர் சம்பவதன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுதா மகனை தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ப்ரீ பையர்  விளையாடியதை  தாய் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.       


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student Commited Suicide in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->