வகுப்பிற்கு வராததை கண்டித்த ஆசிரியர்.. மாணவன் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


வகுப்பிற்கு முறையாக வராததை கண்டித்த ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், அமராவதி பகுதியில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராஜா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், படித்து வந்த மாணவன் ஒருவன் சரிவர பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதனை ஆசிரியர் ராஜா கண்டித்துள்ளார்.இதனால், கோபமடைந்த அந்த மாணவன் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் இருந்த ஆசிரியரை திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திவிட்டு தப்பியோடியுள்ளான்.

இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மாணவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student stabbing teacher in karaikudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->