அண்ணாமலை போட்ட அதிரடி உத்தரவு.. ஒடிசா விரைந்த 3 பேர் கொண்ட உதவிக்குழு..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேற்று மாலை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்தற்போது வரை 288 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்ததாக வருவாய் துறை செயலாளர் தெரிவித்திருந்தார். மேலும் சுமார் 55 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் தலைமையிலான குழுவினர் ஒடிசா விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பாஜகவை சேர்ந்த உதவிக்குழு ஒரிசா செல்லுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திகள் "ஒரிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக்கொண்ட கோரக சம்பவம் நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது மீட்பு பணிகள் தொய்வின்றி இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில்,

இந்த விபத்தில் சிக்கிய தமிழக சகோதர சகோதரிகளுக்கு போர் பரிபூரண உதவி செய்து அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்பி தங்கள் குடும்பத்தாருடன் இணைந்திடும் வரை துணை நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட தமிழக பாஜக சார்பில் குழுவானது அமைக்கப்பட்டு, இக்குழுவானது இன்று ஒரிசா விரைந்து தங்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக உதவி குழு விவரம் ::

திரு கே.ரவிச்சந்திரன்- தேசிய உறுப்பினர் ரயில்வே பணிகள் வசதிகள் ஆலோசனை குழு PH - 98409 45919

திரு கே.பி.ஜெயகுமார் - மாநில தலைவர் பிறமொழி பிரிவு PH - 94440 49949

திரு  ஏ.என்.எஸ்.பிரசாத் முன்னாள் மாநில தலைவர் ஊடகப்பிரிவு PH - 98401 70721 

விபத்தில் சிக்கிய அல்லது ரயிலில் பயணித்த தங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் யார் எனும் எவ்வித உதவி தேவைப்பட்டாலும் இவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என தனது பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

support team from TN BJP going to Odisha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->