அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க கோரிக்கை..!
swetter provided to government school students
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக சீருடை, புத்தகப்பை, காலுறை, கம்பளிச் சட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.
அதன்படி, மாநிலம் முழுவதும் மலைப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் 1.17 லட்சம் கம்பளிச் சட்டைகள் தைத்து வழங்குவதற்கான ஒப்பந்த படிவத்தை தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
அதேபோன்று அடுத்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 71.61 லட்சம் காலுறைகள் வழங்கவும் ஒப்பந்த படிவம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
swetter provided to government school students