ஆட்சியரின் காலணியை கையால் எடுத்த தபேதார்.! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஆட்சியரின் காலணியை கையால் எடுத்த தபேதார்.! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத் திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா வருகிற 18-ந்தேதி ஆரம்பமாகி 18 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்வதற்காக நேற்று கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு கோவில் வாசலில் ஆட்சியர் ஷ்ரவன்குமார், தனது காலணியை கழற்றினார். அதன் பின்னர் அந்த காலணியை எடுத்துச்சென்று காரில் வைக்குமாறு தபேதாரிடம் தெரிவித்தார். 

உடனே தபேதாரும் ஆட்சியரின் காலணியை கையில் எடுத்துச்சென்று காரில் வைத்தார். அதன் பின்னர் ஆட்சியர் கோவிலில் ஆய்வு செய்து முடித்து விட்டு வெளியே வந்ததும், தபேதார் ஓடிச்சென்று காரில் இருந்த காலணியை எடுத்து வந்து ஆட்சியரின் கால் அருகே வைத்தார். 

அதனை ஆட்சியரும் காலில் போட்டுக்கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இவையனைத்தும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tabedar carried collctor shoes on hand in koothandavar temple kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->