தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து இன்று காலை மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

வீட்டில் இருந்து கொரோனா கவச உடையுடன் அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நிலை சீராக இருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து இன்று காலை மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Chief Minister M.K.Stal's health official announcement today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->