#Chandrayaan3 || வரலாற்றுச் சாதனை படைத்த இஸ்ரோவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவில் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன் மூன்று விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவிய நிலையில் இன்று மாலை சரியாக 6:04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

நிலவின் தென் துருவத்தில் முதன் முதலில் தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்த இஸ்ரோவுக்கு பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் "சந்திரனில் இந்தியா! சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்! சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை. அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்!" என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu CM MKStalin congratulates to ISRO for Chandrayaan3 mission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->