பொங்கலை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறை அறிவித்த தமிழக அரசு; சொந்த ஊருக்கு செல்வோர் மகிழ்ச்சி..!
Tamil Nadu government declares 6 days of holiday on the occasion of Pongal festival
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜனவரி 17-ந் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14,15,16, ஆகிய நாட்கள் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 17-ந் தேதியும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 25-ஆம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முந்தைய நாள் திங்கட்கிழமை ஜனவரி 13-ஆம் தேதி விடுமுறை விடப்பட வேண்டும் எனவும், இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக சனி, ஞாயிறு தினங்கள் அடங்களாக ஜனவரி 11 ஆம் தேதி தொடக்கம் 19 ஆம் தேதிவரை 09 நாட்களுக்கு பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டும் என இணையவாசிகள் இப்போதே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
English Summary
Tamil Nadu government declares 6 days of holiday on the occasion of Pongal festival