தமிழ் புரட்சிக் களம் அமைப்பின் சார்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.. V.G.p சந்தோசம் பங்கேற்பு!
Tamil New Year Celebration on behalf of Tamil Puratchi Kalam V.G.P Happy Participation
தமிழ் புரட்சிக் களம் அமை ப்பின் சார்பில் 41.250-வது ஆண்டு அகர வருடம் தமிழ் புத்தாண்டுபுரசைவாக்கத்தில் அமைந் துள்ள தனியார் அரங்க த்தில் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
தமிழ் புரட்சிக் களத்தின் அமைப்பாளர் த. பத்மநா பன் முதன்மையில் தமிழ் புரட்சிக்களத்தில் தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 41,250-வது தமிழ் புத்தாண்டு ஜோதி யை VGP குழுமத் தலைவர் V.G. சந்தோசம் நாடார் ஏற்றி வாணிக வைசிய செட்டி யார் சங்க தலைவர் D. பால கிருஷ்ணன் செட்டியாரிடம் வழங்கி 41 .250 வது தமிழ் புத்தாண்டை துவக்கி வைத்தார்கள்.
இவ்விழாவில் தமிழ் புத்தா ண்டு ஒரு சுற்று 60 வருடங் களைக் கொண்டது என்கிற முறை மாற்றப்பட்டு ஒரு வலம் 61.009 வருடங்கள் என பெயர்கள் அறிமுகப் படுத்தப்பட்டது.
அடுத்த வரும் 41.251-வது தமிழ் புத்தாண்டு ஜோதி யை செட்டியார் சமுதாயம் தேவர் சமுதாயத்திடம் வழங்க தீர்மானிக்கப் பட்டது.புதிதாக வடிவமைக்கப்பட்ட தமிழ் கொடியை T.K. செல் லசாமி தேவர் அறிமுகப் படுத்த டாக்டர் சாத்தையா ராமானுஜம் யாதவ் பெற்று க் கொண்டார்.
மேலும் இவ்விழாவில் தமிழ் வாழ்த்து பாடலின் ஒலி பேழையை சி என்.. ராம மூர்த்தி வெளியிட குளத்து மணி அய்யர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் தமிழர் அறம் வளர்த்த தமிழ் செம்மல்கள் கு. காம ராஜர், பசும்பொன் முத்து ராமலிங்க தேவர், P. கக்க ன், APJ அப்துல் கலாம், சி.பா. ஆதித்தனார் பெயரில தமிழ் படைப்பா ளிகள் விருது முறையே கவிஞர் ரவிபாரதி, கலை மாமணி ஏர்வாடி ராதா கிருஷ்ணன், முனைவர் முகிலை ராஜபாண்டியன், கவிஞர் கார்முகிலோன் லெமூரியர் ஆராய்சியர் Tரவீந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி களில் தமிழக அரசு எத்த னை மொழி கொள்கையை பின்பற்றினாலும் கவலை இல்லை. ஆனால் தமிழ்நா ட்டின் பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாக இல்லை யென்றால் அந்த பள்ளிக்கு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் எனக் கூறிய பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சிலை யை அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கு ம் கோயில்களுக்கு முன் தமிழக அரசு நிர்மாணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
தமிழ் புரட்சிக்களத்தி ன் பொதுச் செயலாளர் துணைத் தலைவர் கொட்டிவாக்கம் முருகன.உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
English Summary
Tamil New Year Celebration on behalf of Tamil Puratchi Kalam V.G.P Happy Participation