தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வரும் 18-ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 12-ஆம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில் பள்ளிகள் திறந்ததை அடுத்து, 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

 இந்த நிலையில், தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் ஆகிய தலைப்புகளில் அரசுப்பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வரும் 18-ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu all teachers training camp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->