மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகுவாரா?.. அடுத்த மாநிலத் தலைவர் யார்? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெரும்பான்மையான பகுதியில் பல்வேறு வழிகளில் பாஜக தனது கட்சியை வளர்த்து ஆட்சியைப் பிடித்து வருகிறது. வழக்கம்போல், கர்நாடகா மாநிலத்தை தவிர்த்து தென் மாநிலங்களில் பாஜக தன்னை வலுப்பெறச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. 

அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்பெறச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில், தற்போது பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்துவருகிறார். 

கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தலைவராக பதவியேற்ற அண்ணாமலை தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்திப்பது, ஆளும் கட்சியின் மீது ட்விட்டரில் ஊழல் குற்றச்சாட்டுகளை வைப்பது என்று தீவிரமாக இயங்கிவந்தார். 

ஆனால், தான் முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு சரியான ஆதாரங்களை வெளியிடாமல் இருந்துவந்த அண்ணாமலையை தற்போது திமுகவினர் விமர்சித்துவந்தனர். 

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை விலக்க தேசிய பாஜக தலைமையகம் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் குறித்து பாஜக டெல்லி வட்டாரத்தில் விசாரணை செய்தபோது தெரிவித்ததாவது, 

‘இப்பொழுது இருக்கும் அண்ணாமலை, வெறும் வாய்ச்சொல் வீரர் என்று பா.ஜ.க. டெல்லி தலைமையகம் கருதுகிறது. அவரை விரைவில் மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறது. 

அதனால், இந்தப் பதவியைக் குறிவைத்து பேராசிரியர் மதுரை சீனிவாசன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலரும் தீவிரமாகக் காய் நகர்த்திக்கொண்டு வருகிறார்கள். 

இதுகுறித்து இங்குள்ள கட்சியின் சீனியர்கள், மதுரை சீனிவாசனைத் தலைவராக்கினால், அவர் தன் நட்புணர்வால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸையும் பா.ஜ.க. கூட்டணிக்கு இலகுவாகக் கொண்டுவருவார் என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல் வானதி சீனிவாசனை நியமித்தால், அவர் அ.தி.மு.க.வில் இருக்கும் எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருடன் இருக்கும் நட்புணர்வால், அ.தி.மு.க.வை, பா.ஜ.க.வுடனே இருக்கும்படி பார்த்துக்கொள்வார் என்று மேலிடத்திற்குப் பரிந்துரைகளும் செய்யப்படுகிறது’ என்று பாஜக டெல்லி தலைமையகம் தெரிவிக்கின்றது.  


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu bjp leader remove position in national bjp office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->